திருக்கோணேஸ்வரர் ஆலயச் சூழலில் சிவலிங்கத்தின் மேல் குரங்கு!


திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரால் தேவாரப் பாடல் பெற்ற புகழ்பெற்ற ஆலயமாகத் திகழும் திருக்கோணேஸ்வரர் ஆலயச் சூழலில் சிவலிங்கத்தின் மேல் குரங்கொன்று ஏறி நின்று வாழைப்பழம் உண்ணும் காட்சி நேற்றுச் சனிக்கிழமை(16.09.2023) முற்பகல் வேளையில் பதிவாகியுள்ளது. மேற்படி ஆலயத்திற்கு வருகை தந்த அடியவரொருவர் வழங்கிய வாழைப்பழத்தைக் குரங்கொன்று தனது வாயால் கவ்விச் சென்று சிவலிங்கம் மீது ஏறி நின்று உண்ணும் காட்சியே இவ்வாறு பதிவாகியுள்ளது. 

இந்தக் காட்சியை அடியவர்கள் பலரும் வியப்புடனும், ஆர்வத்துடனும் பார்வையிட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. 
(செ.ரவிசாந்)