நல்லூரில் திலீபனுக்கு மரியாதை செலுத்திய சிங்கள முதியவர்!

பன்னிரண்டு தினங்கள் அகிம்சை வழியில் உண்ணாவிரதமிருந்து  உயிர்நீத்த தியாகதீபம் திலீபனின் 36 ஆவது ஆண்டு நினைவேந்தல் தின நிகழ்வை முன்னிட்டு நல்லூரில் அமைந்துள்ள தியாகதீபம் திலீபன் நினைவுத் தூபியடியில் மூன்றாவது நாளாகவும் இன்று ஞாயிற்றுக்கிழமை(17.09.2023) காலை அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.

இந் நிலையில் இன்று காலை-09.45 மணியளவில் திலீபன் நினைவுத் தூபிக்கு முன்பாக அமைந்துள்ள பருத்தித்துறை வீதியால் வேறு சில சிங்களவர்களுடன் நடந்து சென்ற சிங்கள முதியவரொருவர் திடீரென்று திலீபன் நினைவுத் தூபிக்கு முன்பாக நின்று தனது தொப்பியைக் கழற்றி மரியாதை செலுத்தியுள்ளதுடன் திலீபனின் தியாகத்தை எண்ணிக் கண் கலங்கினார்.    

அவ்விடத்தை விட்டுச் சிறிது தூரம் சென்ற பின்னர் மீண்டும் தனது தொப்பியை அணிந்து சென்றமையை அவதானிக்க முடிந்தது.