யாழ்.பல்கலைக்கழகத்தில் நாளை நூலறிமுக நிகழ்வு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சைவசித்தாந்தத் துறை நடாத்தும் அமரர். ஆ.சபாரத்தினத்தின் ஒரு விளக்கிலிருந்து ஏற்றிய பல விளக்குகள் நூலின் நூலறிமுக நிகழ்வு நாளை செவ்வாய்க்கிழமை (19.09.2023) மாலை-03 மணி முதல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட  கருத்தரங்க மண்டபத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சைவசித்தாந்தத்துறைத் தலைவர் கலாநிதி பொ.சந்திரசேகரம் தலைமையில் இடம்பெறவுள்ளது.

எழுத்தாளர் அ.யேசுராசா நூலறிமுக உரையையும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை முதுநிலை விரிவுரையாளர் ஈ.குமரன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகவியல்துறை முதுநிலை விரிவுரையாளர் இ.இராஜேஸ்கண்ணன் ஆகியோர் நூலாய்வுரைகளையும் ஆற்றவுள்ளனர். பதிப்பாசிரியர் நா.நவராஜ் ஏற்புரையை நிகழ்த்துவார்.