பூத்தக்கொடி புகழ் செல்லத்துரை குமாரசாமி அவர்கள் குறித்த நினைவுப் பகிர்வு (Video)

 


பூத்தக்கொடி புகழ் சங்கீத கலாபூஷணம் செல்லத்துரை குமாரசாமி அவர்கள் குறித்த தனது பசுமையான நினைவுகளை பகிர்ந்து கொள்கிறார் கல்வியியலாளரும் எழுத்தாளருமான வல்வை அனந்தராஜ். 

 16.08.2023 அன்று காலமான "பூத்தகொடி பூக்களின்றி தவிக்கின்றது.." என்ற தாயக பாடல் உட்பட பல  பாடல்களை பாடிய ஈழத்து சீர்காழி என அழைக்கப்படும் செ.குமாரசாமி (வரதன்) அவர்களின் முதலாவது மாத நிறைவு நாள் இன்றாகும். 

73 வயதில் காலமான செ.குமாரசாமி அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் இசைத்துறை பட்டதாரி ஆவார்.

பன்முக ஆளுமை கொண்ட இவர் ஈழத்துக்கென்றே தனித்துவமான பக்திப் பாடல் மரபை உருவாக்கியதுடன் ஏராளமான நாட்டிய நாடகங்களுக்கு இவர் இசையமைத்துப் பாடியுள்ளார். அத்துடன் சிறந்த ஓவியராகவும் விளங்கியவர். 

மேலும் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் இசைத் துறை விரிவுரையாளராகவும் பிரதி அதிபராகவும் சேவையாற்றினார்.