நல்லூரில் தியாகதீபம் திலீபனின் தியாகத்தை நினைத்துக் கண்ணீர் சிந்திய வயோதிபத் தாய்!

பன்னிரண்டு தினங்கள் அகிம்சை வழியில் உண்ணாவிரதமிருந்து உன்னத இலட்சியத்திற்காக  உயிர்நீத்த தியாகதீபம் திலீபனின் 36 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (15.09.2023) திலீபன் உண்ணாவிரதம் ஆரம்பித்த நேரமான காலை-09.45 மணியளவில் நல்லூரில் அமைந்துள்ள திலீபனின் நினைவுத் தூபியடியில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

நிகழ்வில் கலந்து கொண்டு தியாகதீபம் திலீபன் நினைவுத் தூபிக்கு கும்பிட்டு மலர் தூவி அஞ்சலி செலுத்திய வயோதிபத் தாயொருவர் பின்னர் எரிந்து கொண்டிருந்த பொதுச் சுடரடியில் சென்று தனது இரு கைகளாலும் கண்களில் ஒற்றித் தியாகதீபம் திலீபனின் உன்னத தியாகத்தை நினைத்துக் கண்ணீர் சிந்தினார்.

குறித்த காட்சி அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்துவதாக அமைந்திருந்தது.