ஆனைக்கோட்டையில் நாளை வருடாந்த இரத்ததான முகாம்

          


ஆனைக்கோட்டை அடைக்கல மாதா ஆலயத்தின் திருநாளை முன்னிட்டு ஆலய இளைஞர் மன்றத்தின் ஏற்பாட்டில் வருடாந்த இரத்ததான முகாம் நிகழ்வு நாளை  ஞாயிற்றுக்கிழமை(03.09.2023) காலை-09 மணி தொடக்கம் பிற்பகல்-01.30 மணி வரை மேற்படி ஆலய முன்றலில் இடம்பெறவுள்ளது.

இந்த இரத்ததான முகாம் நிகழ்வில் அனைத்துக் குருதிக் கொடையாளர்களும், குருதி வழங்க ஆர்வமுள்ளவர்களும் கலந்து கொண்டு இரத்ததானப் பணிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும், இரத்ததானம் வழங்க விரும்புபவர்கள் 0766028568 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் இரத்ததான முகாம் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.