உயர்தரப் பரீட்சை தொடர்பில் இதுவரை இறுதித் தீர்மானம் இல்லை!


கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான திகதி தொடர்பில் இதுவரை இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை எனவும், எதிர்வரும் திங்கட்கிழமைக்குள்(02.10.2023) இறுதித் தீர்மானம் அறிவிக்கப்படும் எனவும் கல்வி அமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, உயர்தரப் பரீட்சைத் திகதிகளில் மாற்றம் மேற்கொள்ள நேரிடுமென கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கடந்த- 21 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.