கொக்குவில் பொற்பதி சனசமூக நிலையமும், கொக்குவில் மனோன்மணி சனசமூக நிலையமும் இணைந்து முன்னெடுக்கும் மாபெரும் இரத்ததான முகாம் நிகழ்வு நாளை ஞாயிற்றுக்கிழமை (24.09.2023) காலை-08.30 மணி முதல் பிற்பகல்-02 மணி வரை கொக்குவில் மனோன்மணி சனசமூக நிலைய மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
இந்த இரத்ததான முகாம் நிகழ்வில் அனைத்துக் குருதிக் கொடையாளர்களையும், ஆர்வலர்களையும் தவறாது கலந்து கொள்ளுமாறு இரத்ததான முகாம் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைத்துள்ளனர்.