தெல்லிப்பழை துர்க்காதேவி ஆலயத்தின் உபதலைவர் மறைவு


வரலாற்றுப் பிரசித்தி பெற்ற தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி ஆலய நிர்வாகத்தில் நீண்டகாலமாக உபதலைவராக விளங்கியவரும், சமூக சேவையாளருமான தேசகீர்த்தி லயன். ச.ஆறுமுகநாதன் இன்று செவ்வாய்க்கிழமை(26.09.2023) மாலை யாழில் தனது-84 ஆவது வயதில் காலமானார்.   

அன்னாரின் இறுதிக் கிரியைகள் தெல்லிப்பழை துர்க்காபுரம் பகுதியில்  அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் நாளை புதன்கிழமை (27.09.2023) பிற்பகல்-12.30 மணியளவில் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

கம்பீரமான தனது தோற்றத்தால் மாத்திரமன்றி செயற்கரிய செயல்களாலும் மக்கள் பலரினதும் மனங்களில் நீங்கா இடம்பிடித்த அன்னாரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றோம்.