நல்லூர்க் கந்தன் மஹோற்சவப் பெருந் திருவிழாக் கால அருளுரை

             


வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலய மஹோற்சவப் பெருந் திருவிழாக் காலத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் சிவகுரு ஆதீனத்தின் ஏற்பாட்டில் அருளுரை நிகழ்வு இடம்பெற்று வருகிறது.

அந்தவகையில் இவ் ஆலயத்தின் பத்தொன்பதாம் திருவிழாவான இன்று வெள்ளிக்கிழமை (08.09.2023) இரவு-07.45 மணி முதல் 08.15 மணி வரை இல 692, பருத்தித்துறை வீதி, நல்லூரில் அமைந்துள்ள சிவகுரு ஆதீன மண்டபத்தில் நடைபெறவுள்ள அருளுரை நிகழ்வில் யாழ்ப்பாணம் சிவகுரு ஆதீன முதல்வர் தவத்திரு.வேலன் சுவாமிகள் கலந்து கொண்டு "மன ஒருமைப்பாடு" எனும் தலைப்பில் உரையாற்றுவார்.