ஈழத்துச் சித்தர் குடைச் சுவாமிகளின் மாதாந்தக் குருபூசை நிகழ்வு நாளை செவ்வாய்க்கிழமை (03.10.2023) காலை-08.30 மணியளவில் கோண்டாவில் கிழக்கு ஸ்ரீ அற்புதநர்த்தன விநாயகர் ஆலய வளாகத்தில் அமைந்துள்ள குடைச் சுவாமிகளின் சமாதி ஆலயத்தில் கூட்டுப் பிரார்த்தனையுடன் ஆரம்பமாகி நடைபெறவுள்ளது.
தொடர்ந்து முற்பகல்-11 மணியளவில் குருபூசை நிகழ்வுகளும், அதனைத் தொடர்ந்து விசேட அன்னதானமும் இடம்பெறுமென மேற்படி ஆலய நிர்வாக சபையினர் தெரிவித்துள்ளனர்.