குப்பிழானில் நாளை வீடு வீடாக டெங்கு களத் தரிசிப்பு

தற்போதைய காலநிலை மாற்றத்தின் காரணமாக டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுவதைக் கருத்திற் கொண்டு ஜே-210 கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட குப்பிழான் தெற்குப் பகுதியில் நாளை செவ்வாய்க்கிழமை(03.10.2023) காலை-08 மணி முதல் வீடு வீடாக டெங்கு களத் தரிசிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது.

எனவே, வீட்டுச் சுற்றாடலில் நுளம்பு பெருகக் கூடிய இடங்களான தகரப் பேணிகள், கண்ணாடிப் போத்தல்கள், பொலித்தீன் பைகள் என்பவற்றைப் பொதுமக்கள் தரம் பிரித்துத் தத்தமது வீடுகளுக்கு முன்பாக வைக்குமாறும், அவற்றை வாகனம் மூலம் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைப் பிரிவினர் அறிவித்துள்ளனர்.

டெங்கு களத் தரிசிப்பு நடவடிக்கையின் போது நுளம்பு பெருகக் கூடிய இடங்கள் அல்லது டெங்குக் குடம்பிகள் காணப்படுமாயின் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் உடுவில் சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவினர் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, இதுதொடர்பில் இன்று திங்கட்கிழமை(02.10.2023) பிற்பகல் குப்பிழானில் அறிவிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. 

(செ.ரவிசாந்)