யாழ்.தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் மாணவ முதல்வர் நாள் நிகழ்வு நாளை புதன்கிழமை (04.10.2023) நண்பகல்-12 மணி முதல் மேற்படி கல்லூரியின் பிரதான மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
கல்லூரியின் சிரேஷ்ட மாணவ தலைவர் ரி.இளங்குமரன் தலைமையில் நடைபெறவுள்ள குறித்த நிகழ்வில் கல்லூரியின் பிரான்ஸ் பழைய மாணவர் சங்கக் கிளையின் பொருளாளர் பி.ராஜகரன், கல்லூரியின் பழைய மாணவர் எஸ்.ஜெயராஜ், அளவெட்டி அருணோதயக் கல்லூரியின் ஆசிரியரும், பழைய மாணவருமான த.ஸ்ரீபிரகாஸ் ஆகியோர் விருந்தினர்களாகக் கலந்து கொள்ளவுள்ளனர்.