உயர்தரப் பரீட்சைக்கான திகதி விரைவில் வெளியாகும்!


2023 ஆம் கல்வியாண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான திகதி எதிர்வரும் நாட்களில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தினால் அறிவிக்கப்படுமெனக் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை(03.10.2023) எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த போதே கல்வி அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.