கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் நூற்றாண்டு நிறைவுவிழா நாளை

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் நூற்றாண்டு நிறைவு விழா நாளை புதன்கிழமை(11.10.2023) காலை-08.30 மணியளவில் மேற்படி கலாசாலையின் ரதிலட்சுமி மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

கலாசாலை முதல்வர் செந்தமிழ்ச் சொல்லருவி ச.லலீசன் தலைமையில் நடைபெறவுள்ள நிகழ்வில் கல்விஅமைச்சர் சுசில்பிரேம ஜெயந்த பிரதம விருந்தினராகவும், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.

நிகழ்வில் கலாசாலையின்  நூற்றாண்டு சஞ்சிகையாகிய கலைமலர் வெளியீடு, அஞ்சல் திணைக்களத்தின் இருபத்தைந்து ரூபா முத்திரை வெளியீடு, முதல்நாள் அஞ்சல் உறை வெளியீடு, முன்னாள் முதல்வர்களின் கௌரவிப்பு என்பன இடம்பெறவுள்ளதாக கலாசாலையின் முதல்வர் லலீசன் தெரிவித்துள்ளார்.