ஐக்கிய அமெரிக்காவின் இராஜாங்க திணைக்கள அதிகாரிகளை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணித் தலைவி வாசுகி சுதாகரன் மற்றும் மகளிர் அணிச் செயலாளர் கிருபா கிரிதரன் ஆகியோருடன் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சுகாஸ் அவர்களும் சந்தித்து தமிழினத்தின் அவலங்களையும் அபிலாஷைகளையும் வலியுறுத்தினர்.