தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் சமகால அரசியல் உரையரங்கு நிகழ்வு நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை(15.10.2023) மாலை-03 மணி முதல் நல்லூர் இளங்கலைஞர் மன்ற மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத் தலைவர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தலைமையில் நடைபெறவுள்ள நிகழ்வில் அரசியல் ஆய்வாளர் ம.நிலாந்தன் தமிழ்மக்களுக்கு யார் பொறுப்பு? எனும் தலைப்பிலும், தமிழ்த்தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் நலிவுறும் தமிழ்த்தேசியம் எனும் தலைப்பிலும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அரசறிவியல்துறைத் தலைவர் பேராசிரியர்.கே.ரி.கணேசலிங்கம் பிராந்திய அரசியலில் இஸ்ரேல்- ஹமாஸ் போர்: மாற்றங்களும் விளைவுகளும் எனும் தலைப்பிலும் கருத்துரைகள் ஆற்றவுள்ளனர்.
(செ.ரவிசாந்)