குப்பிழான் வீரமனை கன்னிமார் கெளரி அம்பாள் ஆலய வருடாந்த நவராத்திரி பூசை வழிபாடு நேற்று ஞாயிற்றுக்கிழமை(15.10.2023) மாலை-05 மணிக்கு கும்பம் வைத்தலுடன் ஆரம்பமாகியது.
தொடர்ந்தும் ஒன்பது தினங்கள் அபிஷேகம், பூசை வழிபாடுகள், சகலாவல்லி மாலை ஓதுதல் என்பன இடம்பெறும்.
நவராத்திரியின் பத்தாம் திருவிழாவான மானம்பூத் திருவிழா (வாழைவெட்டு) எதிர்வரும்-24 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை-10 மணிக்கு இடம்பெறுமென மேற்படி ஆலய நிர்வாக சபையினர் தெரிவித்துள்ளனர்.
(செ.ரவிசாந்)