QR முறைமையை அரசாங்கம் மீண்டும் அமுல்படுத்தவுள்ளதாகச் சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் அவ்வாறான தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்கான QR முறைமையை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கு எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் மேலும் சுட்டிக் காட்டினார்.