குப்பிழான் வீரமனை கன்னிமார் கெளரி அம்பாள் ஆலய பரிபாலன சபையின் பொதுக் கூட்டம் நாளை மறுதினம் சனிக்கிழமை(28.10.2023) மாலை-04 மணியளவில் மேற்படி ஆலய முன் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
மேற்படி ஆலய பரிபாலன சபையின் தலைவர் செ.நவரத்தினராசா தலைமயில் நடைபெறவுள்ள பொதுக் கூட்டத்தில் புதிய நிர்வாகசபைத் தெரிவும் ஆலய அபிவிருத்தி சம்பந்தமான கலந்துரையாடலும் நடைபெறும். எனவே, உபயகாரர்கள், அடியவர்கள் மற்றும் நலன்விரும்பிகளைப் பொதுக் கூட்டத்தில் தவறாது கலந்து கொள்ளுமாறு மேற்படி ஆலய பரிபாலனசபையினர் அழைத்துள்ளனர்.
இதேவேளை, பொதுக் கூட்டம் தொடர்பில் இன்று இரவு கிராமத்தில் அறிவிப்புப் பணி முன்னெடுக்கப்பட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.