யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மரபுரிமைக் கழகத்தின் ஏற்பாட்டில் மரபுரிமையைப் பாதுகாப்பதில் அருங்காட்சியகத்தின் முக்கியத்துவம் எனும் தலைப்பிலான கருத்தரங்கு நிகழ்வு நாளை செவ்வாய்க்கிழமை (31.10.2023) மேற்படி கல்லூரியின் சபாலிங்கம் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
நாளை காலை-08 மணி முதல் காலை-10 மணி வரையும், முற்பகல்-10.30 மணி முதல் நண்பகல்-12 மணி வரையும் என இரண்டு பகுதிகளாக குறித்த கருத்தரங்கு நிகழ்வு இடம்பெறும்.
மேற்படி நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலைப்பீடத் தலைவரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான பாக்கியநாதன் அகிலன் வளவாளராகக் கலந்து கொள்ளவுள்ளார்.