பல்கலைக்கழகத்துக்குத் தெரிவான இணுவில் பாடசாலை மாணவர்களுக்கு ஊக்குவிப்புத் தொகை

இணுவில் இந்துக் கல்லூரி மற்றும் இணுவில் மத்திய கல்லூரி ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்று உயர்தரப் பரீட்சையில் சித்தியெய்திப் பல்கலைக் கழக நுழைவுக்காகக் காத்திருக்கும் மாணவர்களுக்குப் பெரிய பிரித்தானியா- இணுவில் ஒன்றியக் கிளை ஊக்குவிப்புத் தொகையினை வழங்கியிருந்தது. 

இந் நிலையில் நேற்றுச் சனிக்கிழமை(28.10.2023) இணுவில் அறிவாலய மண்டபத்தில் நடைபெற்ற முழு நிலாக் கலையரங்கு நிகழ்வில் இணுவில் இந்துக் கல்லூரி அதிபர் வேலுப்பிள்ளை உதயமோகன், இணுவில் மத்திய கல்லூரி அதிபர் இளையதம்பி துரைசிங்கம் ஆகியோர் குறித்த ஊக்குவிப்புத் தொகையினை இணுவில் அறிவாலய உப செயலாளர் கணபதி சர்வானந்தாவிடமிருந்து பெற்றுக் கொண்டனர்.