யாழ்.மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை மின்தடை!


மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ்.மாவட்டத்தின் பல பகுதிகளிலும் நாளை சனிக்கிழமை(07.10.2023) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சாரசபை தெரிவித்துள்ளது.

இதன்படி, நாளை காலை-08.30 மணி முதல் மாலை-05 மணி வரை யாழ்.காரைநகர் வலந்தலை, சிவகாமி அம்மன் கோவிலடி, காரைநகர் தபால் அலுவலகம் அருகில், கோவலம், மருதபுரம், உதயபுரம் ஆலடி, வியாவில், கருங்காலி, பண்டத்தரிப்பு, கடற்கரை வீதி- குருநகர், உயர் தொழில்நுட்பவியல் கல்வி நிறுவனம்- குருநகர், கட்டடத் திணைக்களம்- கடற்கரை வீதி, மணியந் தோட்டம் ஐஸ் தொழிற்சாலை, நெபாட் வலைத் தொழிற்சாலை, ஏ.வி.வீதி, கடற்கரை வீதி, பழைய பொங்கா வீதி, கொழும்புத்துறை வீதி, கொழும்புத்துறை நெடுங்குளம் வீதி, சுவாமியார் சந்தி, டேவிட் வீதி, மணியத் தோட்டம், பாசையூர் ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டிருக்குமெனவும் இலங்கை மின்சாரசபை மேலும் குறிப்பிட்டுள்ளது. 

(செ.ரவிசாந்)