உள்ளூர் உற்பத்திப் பொருட்களுக்கான வர்த்தகக் கண்காட்சி யாழில் ஆரம்பம்

கைத்தொழில் அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகாரசபை யாழ்.மாவட்டச் செயலகத்துடன் இணைந்து நடாத்தும் வடமாகாண சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களின் உள்ளூர் உற்பத்திப் பொருட்களுக்கான வர்த்தகக் கண்காட்சி இன்று வெள்ளிக்கிழமை(06.10.2023) காலை-09 மணிக்கு யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையத்தில் ஆரம்பமானது.


யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தலைமையில் நடைபெற்ற கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட வடக்கு மாகாணப்  பிரதம செயலாளர் எஸ்.எம்.சமன்பந்துலசேன கண்காட்சியைச் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.  

வடமாகாண உற்பத்தியாளர்களுக்குச் சந்தை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இந்தக் கண்காட்சியில் நூற்றுக்கும் அதிகமான பனை, தும்பு சாா் உற்பத்திப் பொருட்கள், ஆடைகள், தோல் உற்பத்திப் பொருட்கள் ஆகிய உள்ளூர் உற்பத்திப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.



இதேவேளை, இன்று ஆரம்பமான மேற்படி கண்காட்சி நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை(08.10.2023) வரை தினமும் காலை-09.00 மணி முதல் இரவு-08.00 மணி வரை தொடர்ந்ச்சியாக மூன்று தினங்கள் நடைபெறவுள்ளது.