உடுப்பிட்டியில் நாளை இரத்ததான முகாம் நிகழ்வு


 யாழ்.தமிழ் பவுண்டேசனின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம் நிகழ்வு நாளை சனிக்கிழமை (07.10.2023) காலை-09 மணி முதல் பிற்பகல்-02 மணி வரை உடுப்பிட்டி உலக இரட்சகர் தேவாலயத்தில் இடம்பெறவுள்ளது.

இந்த இரத்ததான முகாம் நிகழ்வில் அனைத்துக் குருதிக் கொடையாளர்களையும், ஆர்வலர்களையும் தவறாது கலந்து கொண்டு இரத்ததானப் பணிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு இரத்ததான முகாம் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைத்துள்ளனர். இரத்ததானம் வழங்க விரும்புபவர்கள் 0779955987 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் இரத்ததான முகாம் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் கேட்டுள்ளனர்.