நசீர் அஹமட்டை நீக்கியமை சட்டபூர்வமானது: உயர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு

 


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து நசீர் அஹமட்டை நீக்கியமை தொடர்பில் கட்சியின் செயலாளர் நாயகம் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் நசீர் அஹமட்டிற்கு அனுப்பிய கடிதத்தைச் சவாலுக்குட்படுத்தி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. 

கட்சியின் உறுப்புரிமையிலிருந்து நசீர் அஹமட்டை நீக்கியமை சரியானதும், சட்டபூர்வமானதுமானதுமான தீர்மானமென உயர்நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை(06.10.2023) வழங்கியுள்ள தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

இதேவேளை,  அமைச்சுப் பதவிக்காக கட்சி மாறுபவர்களுக்கு இந்தத் தீர்ப்பு ஒரு எச்சரிக்கையாக இருக்குமென ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தெரிவித்தார்.