புலமைப் பரிசில் பரீட்சை: கருத்தரங்குகள், ​மேலதிக வகுப்புக்களுக்குத் தடை!

ஐந்தாம் தரப் புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும்-15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நாடளாவிய ரீதி 2888 பரீட்சை மத்திய நிலையங்களில் நடாத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.  

ஐந்தாம் தரப் புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான கருத்தரங்குகள், ​மேலதிக வகுப்புக்கள் மற்றும் செயலமர்வுகள் எதிர்வரும்-11 ஆம் திகதி நள்ளிரவு முதல் பரீட்சை நிறைவடையும் வரை தடை செய்யப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. தடையை மீறிச் செயற்படுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பரீட்சைத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.