யாழ்.பல்கலைக்கழகத்தில் நாளை திருமந்திர ஆன்மீக மாநாடு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சைவசித்தாந்தத்துறையும் அகில இலங்கை சைவமகாசபையும் இணைந்து நடாத்தும் திருமந்திர ஆன்மீக மாநாடு-2023 நாளை சனிக்கிழமை(28.10.2023) காலை-08.30 மணி தொடக்கம் மாலை-05 மணி வரை யாழ்.பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் யாழ்.பல்கலைக்கழக சைவசித்தாந்தத் துறைத் தலைவர் கலாநிதி.பொன்னுத்துரை சந்திரசேகரம் தலைமையில் நடைபெறவுள்ளது.

இந் நிகழ்வில் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் பிரதம விருந்தினராகவும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இந்துக் கற்கைகள் பீடாதிபதி  பிரம்மஸ்ரீ ச. பத்மநாபன், சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன், மட்டக்களப்பு மாவட்ட இந்து கலாசார உத்தியோகத்தர் கி.குணநாயகம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இந்துநாகரீகத் துறைத் தலைவர் கலாநிதி.திருமதி.சுகந்தினி சிறிமுரளிதரன், கிழக்குப் பல்கலைக்கழக இந்து நாகரிகத்துறைத் தலைவர் நாகையா வாமன் ஆகியோர் கெளரவ விருந்தினர்களாகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.

நிகழ்வில் ஆதீன குரு முதல்வர்களின் ஆசியுரைகள், சமய குருமார்களின் வாழ்த்துரைகள், சைவ அமைப்புக்களின் தலைவர்மார்களின் உரைகள், திருமந்திர சிறப்புரைகள், திருமந்திரக் கருத்துப்  பகிர்வுகள், திருமந்திர மாநாட்டு மலர் வெளியீடு ஆகிய நிகழ்வுகளும் திருமந்திர இசை அர்ச்சனை, திருமந்திர இயலும் இசையும், திருமந்திர நடன அளிக்கை, திருமந்திர ஆடலரங்கு ஆகிய கலைநிகழ்வுகளும், பரிசில் வழங்கல் உள்ளிட்ட நிகழ்வுகளும் இடம்பெறும். 

(செ.ரவிசாந்)