கொட்டடியில் நாளை மாபெரும் இரத்ததான முகாம்

யாழ்.மாவட்டத் திரிசாரணர் குழாமினால் ஏழாவது தடவையாக நடாத்தப்படும் மாபெரும் இரத்ததான முகாம் நிகழ்வு நாளை வியாழக்கிழமை(05.10.2023) காலை-09 மணி தொடக்கம் பிற்பகல்-02 மணி வரை கொட்டடி முத்தமிழ் வீதியிலுள்ள முன்பள்ளியில் இடம்பெறவுள்ளது.  

இந்த இரத்ததான முகாம் நிகழ்வில் குருதிக் கொடையாளர்கள், ஆர்வலர்கள் அனைவரும் கலந்து கொண்டு இரத்ததானப் பணிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும், இரத்ததானம் வழங்க விரும்புபவர்கள் 0768318990 அல்லது 0740045835 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறும் இரத்ததான முகாம் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.