பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை, தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் இணைந்து நடாத்தும் தமிழகம்- இலங்கை: இலக்கியம்- கலை- பண்பாட்டுத் தொடர்புகள் எனும் கருப் பொருளிலான சர்வதேச ஆய்வு மாநாடு நாளை-30 ஆம் திகதி திங்கட்கிழமை காலை-09 மணி முதல் மேற்படி பல்கலைக்கழக PGIHS கருத்தரங்க மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் ஸ்ரீ.பிரசாந்தன் தலைமையில் நடைபெறவுள்ள நிகழ்வில் பேராதனைப் பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி கலாநிதி.பிரபாத் ஏகநாயக்க பிரதம விருந்தினராகவும், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகப் பதிவாளர் முனைவர் சி.தியாகராஜன் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.