புன்னாலைக்கட்டுவன் ஆயக்கடவை சித்திவிநாயகர் மானம்பூ உற்சவம்


யாழ்.புன்னாலைக்கட்டுவன் ஆயக்கடவை சித்திவிநாயகர் ஆலய நவராத்திரி விரத மானம்பூ உற்சவம் கடந்த செவ்வாய்க்கிழமை (24.10.2023) பக்திபூர்வமாகவும், சிறப்பாகவும்  இடம்பெற்றது.

பிற்பகல்-02.30 மணியளவில் அபிஷேகம், பூசை வழிபாடுகள் ஆரம்பமாகி இடம்பெற்றன. மாலை-04.30 மணியளவில் வசந்தமண்டபப் பூசை வழிபாடுகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து விநாயகப் பெருமான் குதிரைவாகனத்தில் அடியவர்கள் புடைசூழ ஊர்வலமாக எழுந்தருளி புன்னாலைக்கட்டுவன் சிவபூதராயர் ஆலயத்தைச் சென்றடைந்தார். சிவபூதராயர் ஆலய முன்றலில் விசேட கிரியை வழிபாடுகள் நடைபெற்றதைத் தொடர்ந்து மானம்பூ உற்சவம் (வாழைவெட்டு) இடம்பெற்றது.  

அதனைத் தொடர்ந்து சுவாமி புன்னாலைக்கட்டுவன் தெற்குப் பகுதியில் கிராம வலம் வரும் திருக்காட்சியும் இடம்பெற்றது. விநாயகப் பெருமான் இரவு-12.30 மணியளவில் மீண்டும் ஆலயத்தைச் சென்றடைந்ததைத் தொடர்ந்து பிராயச்சித்த அபிஷேகமும் நடைபெற்றது.

(செ.ரவிசாந்)