வலிகாமம் தென்மேற்குப் பிரதேச சபை மண்டபத்தில் நாளை புத்தகக் கண்காட்சி


தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு மானிப்பாய்ப் பொதுநூலகம் ஏற்பாடு செய்துள்ள எங்கட புத்தகங்கள் கண்காட்சி நாளை செவ்வாய்க்கிழமை (10.10.2023) காலை-09 மணிமுதல் மாலை-04.30 மணிவரை வலிகாமம் தென்மேற்குப் பிரதேசசபை மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.  

இந்தக் கண்காட்சியில் அனைத்துப் புத்தகங்களுக்கும் 10 வீத விலைக் கழிவு வழங்கப்படுமெனவும் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.