யாழிசைக் கவித் தடாகம் அமைப்பின் ஏற்பாட்டில் கலைப்புட்பா கிறிட்டி எழுதிய அன்பகவல், விருத்தமாயிரம் நூல்களின் வெளியீட்டு விழா நாளை புதன்கிழமை(18.10.2023) மாலை-03 மணி முதல் சுன்னாகம் பொதுநூலக மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
யாழிசைக் கவித் தடாகம் அமைப்பின் நிறுவுனர் உடுவிலூர் கலா தலைமையில் இடம்பெறவுள்ள நிகழ்வில் உடுவில் பிரதேச செயலர் த.முகுந்தன் பிரதம விருந்தினராகவும், யாழ்.மாவட்டக் கலாசார உத்தியோகத்தர் இரட்ணராஜா கிருஷ்ணகுமார் சிறப்பு விருந்தினராகவும், கவிஞர் யாழ்பாவணன் கெளரவ விருந்தினராகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இதேவேளை, மேற்படி நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.