2022 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகளின் மீள்திருத்தப் பெறுபேறு வௌியிடப்பட்டுள்ளது.
பரீட்சைகள் திணைக்களத்தின் www.doenets.lk ஊடாக அல்லது www.results.exams.gov.lk ஊடாகப் பெறுபேறுகளைப் பெற்றுக் கொள்ள முடியுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பரீட்சை மீள் திருத்தத்திற்கு 60,336 பரீட்சார்த்திகள் விண்ணப்பித்திருந்ததாகப் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.