புனிதமான கார்த்திகை மாதத்தை முன்னிட்டு ஏழாலையில் இரத்ததான முகாம்

புனிதமான கார்த்திகை மாதத்தை முன்னிட்டு "இது விதைகள் துளிர்விடும் மாதம்! நம் உதிரத்தால் உயிர்காப்போம் வாரும்!!” எனும் தொனிப் பொருளில் ஏழாலையூர் நண்பர்கள் அமைப்பின் ஏற்பாட்டில் கொத்மலை பால் உற்பத்தியின் யாழ்ப்பாண விநியோகஸ்தர் ஞானம்ஸ் டிஸ்ரிபியூட்டேர்ஸ்ஸின் அனுசரணையில் வருடாந்த இரத்ததான முகாம் நிகழ்வு   ஞாயிற்றுக்கிழமை (19.11.2023) காலை-09 மணி முதல் பிற்பகல்-01 மணி வரை ஏழாலை மேற்கு உதயசூரியன் சனசமூக நிலைய மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த இரத்ததான முகாம் நிகழ்வில் ஏழாலையைச் சேர்ந்த 25 வரையான இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு குருதிக் கொடை வழங்கினர். தெல்லிப்பழை ஆதார மருத்துவமனை இரத்தவங்கிப் பிரிவினர் நேரடியாகக் கலந்து கொண்டு குருதிச் சேகரிப்பில் ஈடுபட்டனர்.