திருநெல்வேலியில் நாளை வண்ணச் சிட்டுக்கள் நூல் வெளியீட்டு விழா

கவிஞர்.ரஜிதா அரிச்சந்திரனின் வண்ணச் சிட்டுக்கள் நூல் வெளியீட்டு விழா நாளை சனிக்கிழமை (25.11.2023) மாலை-04 மணி முதல் திருநெல்வேலி கிழக்கு வாலை அம்மன் சனசமூக நிலைய மண்டபத்தில் வாலை அம்மன் சனசமூக நிலையத் தலைவர் ச.பிரசன்னா தலைமையில் இடம்பெறவுள்ளது.

மேற்படி நிகழ்வில் யாழ்.மாவட்டக் கலாசார உத்தியோகத்தர் இ.கிருஷ்ணகுமார் வாழ்த்துரையையும், பம்பலப்பிட்டி சைவமங்கையர் வித்தியாலய நூலகர் காயத்திரி சண்முகநாதன் நூலின் வெளியீட்டுரையையும், யாழ்.அம்பன் அ.மி.த.க பாடசாலையின் ஆசிரியர் திருமதி.புவிரஞ்சன் நளாயினி நூலின் மதிப்பீட்டுரையையும் நிகழ்த்தவுள்ளனர்.