இளவாலையில் இன்று வாலிபத் தீபாவளிக் கொண்டாட்டம்

இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் பத்தாம் ஆண்டு நிறைவு விழாவும் வாலிபத் தீபாவளிக் கொண்டாட்டமும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை(12.11.2023) மாலை-05.30 மணிக்கு  இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

மேற்படி சங்கத்தின் தலைவர் நா.சுகந்தன் தலைமையில் இடம்பெறவுள்ள நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ் பிரதமவிருந்தினராகவும், நெடுந்தீவுப் பிரதேச செயலர் எவ்.சி.சத்தியசோதி, மன்னார் உதவித் தேர்தல் ஆணையாளர் வே.சிவராஜா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும், யாழ்.இந்துக் கல்லூரியின் ஆசிரியர் ப.துஷ்யந்தன், பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தரப் பாடசாலையின் ஆசிரியர் ஜெ.ஜெயகிறிஸ்ரோ ஆகியோர் கெளரவ விருந்தினர்களாகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.

குறித்த நிகழ்வில் கெளரவிப்பு நிகழ்வுகள், நடன- நாட்டிய நிகழ்வுகள், கலை,கலாச்சார நிகழ்வுகள், இசைக் கச்சேரி எனப் பல்வேறு நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளதாகவும், நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறும் இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தினர் அழைத்துள்ளனர்.