தீபாவளித் திருநாளை முன்னிட்டு வரலாற்றுச் சிறப்பு மிக்க மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தில் நாளை ஞாயிற்றுக்கிழமை (12.11.2023) சிறப்பு வழிபாடுகள் நடைபெறவுள்ளது.
நாளை காலை-06.30 மணிக்கு உஷக்காலப் பூசை, காலை-07.30 மணிக்கு 108 சங்காபிஷேகம், காலை-09 மணிக்கு காலைச்சந்திப் பூசை, நண்பகல்-12 மணியளவில் உச்சிக்காலப் பூசை என்பன இடம்பெறவுள்ளதாகவும், மாவைக்கந்தன் ஆலயம் அடியவர்கள் வழிபாட்டிற்காக நாளை காலை-06.30 மணி முதல் மாலை-06.30 மணி வரை திறந்திருக்குமெனவும் மேற்படி ஆலய ஆதீன கர்த்தா மகாராஜஸ்ரீ சு.து.ஷண்முகநாதக் குருக்கள் தெரிவித்துள்ளார்.