குப்பிழான் கன்னிமார் கெளரி அம்பாள் ஆலயத்தில் கேதாரகெளரி விரதப் பூர்த்தி வழிபாடுகுப்பிழான் தெற்கு வீரமனை கன்னிமார் கெளரி அம்பாள் ஆலய வருடாந்தக் கேதாரகெளரி விரதப்  பூசையின் பூர்த்திநாள் வழிபாடுகளும், காப்புக் கட்டும் வைபவமும் நாளை  திங்கட்கிழமை (13.11.2023) சிறப்பாக இடம்பெறவுள்ளது.

நாளை காலை-07 மணியளவில் உபயகாரர் சங்கல்பத்துடன் ஆரம்பமாகித் தொடர்ந்து விசேட அபிஷேக, பூசைகளும் நடைபெறும். அதனைத் தொடர்ந்து சுவாமி உள்வீதி, வெளிவீதி வலம் வரும் திருக் காட்சி இடம்பெறுவதுடன் தொடர்ந்து அடியவர்களுக்கு காப்புக் கட்டும் வைபவமும் நடைபெறும். 

(செ.ரவிசாந்)