எழுத்தாளர் அ.இரவி எழுதிய கொற்றவை பற்றிக் கூறினேன் நூல் அறிமுகமும் கலந்துரையாடலும் நிகழ்வு நாளை செவ்வாய்க்கிழமை (14.11.2023) மாலை-04 மணிக்கு கொக்குவில் சந்தியில் இயங்கி வரும் தேசிய கலை இலக்கியப் பேரவையின் கவிஞர் முருகையன் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.
மூத்த எழுத்தாளர் வடகோவை வரதராஜன் தலைமையில் இடம்பெறவுள்ள நிகழ்வில் ஆய்வாளர் சி.விமலன் நூல் அறிமுக உரையையும், நூலாசிரியர் அ.இரவி பதிலுரையையும் ஆற்றவுள்ளனர். சபையோரின் கருத்துரைகளைத் தொடர்ந்து கலந்துரையாடலும் இடம்பெறும். அனைவரையும் நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டுக் குழு அழைப்பு விடுத்துள்ளது.