'ஏழாலை' எனும் பெயர் உருவாகக் காரணமான ஏழு ஆலயங்களில் ஒன்றான ஏழாலை அத்தியடி முருகமூர்த்தி ஆலய கந்தசஷ்டி உற்சவம் நாளை செவ்வாய்க்கிழமை(14.11.2023) பிற்பகல்-02 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.
எதிர்வரும்-18 ஆம் திகதி சனிக்கிழமை வரையான ஐந்து தினங்களும் தினமும் காலை-07 மணிக்குப் பூசை ஆரம்பமாகி அதனைத் தொடர்ந்து காலை-08 மணியளவில் கந்தபுராணபடன நிகழ்வு பெளராணிக வித்தகர் சிவஸ்ரீ மு.சோமசுந்தரக் குருக்கள் தலைமையில் நடைபெறும். பிற்பகல்-02 மணியளவில் விசேட பூசை, திருவிழா, சுவாமி வீதிவலம் வருதல் என்பன இடம்பெறும்.
18 ஆம் திகதி சனிக்கிழமை மாலை சூரன் போரும், 19 ஆம் திகதி
ஞாயிற்றுக்கிழமை காலை-06 மணிக்குப் பாரணைப் பூசையும், அதனைத் தொடர்ந்து அன்னதானமும் இடம்பெறும். அன்றைய தினம் மாலை-04 மணிக்குத் திருக் கல்யாணம் நடைபெற்று சுவாமி உள்வீதி உலா வருதலும் நடைபெறும்.
இதேவேளை, கந்தசஷ்டியின் ஐந்து தினங்களும் சத்துரு சங்ஹர ஹோமமும் இடம்பெறும்.
(செ.ரவிசாந்)