யாழ்.தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் மாணவர் நாடாளுமன்ற அமர்வு நாளை புதன்கிழமை(15.11.2023) நண்பகல்-12 மணியளவில் மேற்படி கல்லூரியின் பிரதான மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
மேற்படி நிகழ்வில் வலிகாமம் வலய சமூக விஞ்ஞான உதவிக் கல்விப் பணிப்பாளர் திருமதி. ல.கி.விக்ரர் ஜெயக்குமார் பிரதம விருந்தினராகவும், வலிகாமம் வலய சமூக விஞ்ஞான ஆசிரிய ஆலோசகர் செ.பாஸ்கரன் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இதேவேளை, நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு மேற்படி கல்லூரிச் சமூகத்தினர் அழைத்துள்ளனர்.