வடமாகாணப் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தேசிய ஒருமைப்பாடுகள் மற்றும் நல்லிணக்க அமைச்சு ஆகியவற்றின் அனுசரணையில் வலிகாமம் கிழக்குபப் பண்பாட்டுப் பேரவையும் கோப்பாய்ப் பிரதேச செயலகமும் இணைந்து நடாத்தும் பண்பாட்டுப் பெருவிழா-2023 நிகழ்வு நாளை புதன்கிழமை(15.11.2023) காலை-09.30 மணி முதல் கோப்பாய்ப் பிரதேச செயலகப் புதிய மாநாட்டு மண்டபத்தில் கோப்பாய்ப் பிரதேச செயலாளர் திருமதி.சுபாஜினி மதியழகன் தலைமையில் நடைபெறவுள்ளது.
விழாவில் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் பிரதம விருந்தினராகவும், வடமாகாணப் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் திருமதி.லாகினி நிருபராஷ் சிறப்பு விருந்தினராகவும், யாழ்.மாவட்டச் சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் திருமதி.சுகுணாளினி விஜயரத்தினம், 2023 ஆம் ஆண்டின் கலாபூஷணம் விருதுக் கலைஞர் விசுவாசம் ஜெகநாதன் ஆகியோர் கெளரவ விருந்தினர்களாகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.
(செ.ரவிசாந்)