சுன்னாகம் இராமநாதன் கல்லூரியின் நூலகதின விழாவும் இராம ஒளி சஞ்சிகை வெளியீடும்

யாழ்.சுன்னாகம் இராமநாதன் கல்லூரியின் நூலகதின விழாவும் இராம ஒளி சஞ்சிகை வெளியீடும்-2023 நிகழ்வு நாளை வியாழக்கிழமை(16.11.2023) காலை-08 மணிக்கு கல்லூரியின் அருணாசலம் மண்டபத்தில் கல்லூரி அதிபர் திருமதி.அம்பிகை சிவஞானம் தலைமையில் இடம்பெறவுள்ளது.

மேற்படி நிகழ்வில் வலிகாமம் வலயப் பிரதிக் கல்விப் பணிப்பாளரும், எழுத்தாளருமான   சுப்பிரமணியம் ஸ்ரீகுமரன் பிரதம விருந்தினராகவும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ உதவியாளரும், கல்லூரியின் பழைய மாணவியுமான திருமதி.ஸ்ரீரங்கநாயகி இராகுலன் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொள்ளவுள்ளனர். 

யாழ்.சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரியின் ஆசிரியர் தவராஜா மோகனராஜ் நூலின் நயப்புரையை நிகழ்த்துவார்.   

(செ.ரவிசாந்)