உடுவில் பிரதேச செயலகத்தில் நாளை பண்பாட்டுப் பெருவிழா: ஏற்பாடுகள் பூர்த்தி

 


வடமாகாணப் பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் உடுவில் பிரதேச செயலகமும் கலாசாரப் பேரவையும் இணைந்து நடாத்தும் பண்பாட்டுப் பெருவிழா-2023 நிகழ்வு நாளை வியாழக்கிழமை (16.11.2023) காலை-09.30 மணி முதல் உடுவில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் உடுவில் பிரதேச செயலாளரும், கலாசாரப் பேரவைத் தலைவருமான த.முகுந்தன் தலைமையில் நடைபெறவுள்ளது.

விழாவில் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் பிரதம விருந்தினராகவும், வடமாகாணப் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் திருமதி.லாகினி நிருபராஷ் சிறப்பு விருந்தினராகவும்,யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நடனத்துறைத் தலைவர் செல்வி.மைதிலி அருளையா கெளரவ விருந்தினராகவும் கலந்து கொள்ளவுள்ளனர். 

இதேவேளை, பண்பாட்டுப் பெருவிழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. 

(செ.ரவிசாந்)