நல்லூரில் நாளை தேசிய வாசிப்பு மாதப் பரிசளிப்பு விழா

நல்லூர் பிரதேச சபை நூலகங்களின் தேசிய வாசிப்பு மாதப் பரிசளிப்பு விழா-2023 நாளை சனிக்கிழமை(18.11.2023) காலை-09 மணி முதல் நல்லூர் பிரதேச சபையின் கலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

நல்லூர் பிரதேச சபையின் செயலாளர் யு.ஜெலீபன் தலைமையில் இடம்பெறவுள்ள விழாவில் வடக்கு மாகாண மகளிர் விவகார, சமூக சேவைகள், புனர்வாழ்வு மற்றும் கூட்டுறவு அமைச்சின் செயலாளர் பொ.வாகீசன் பிரதம விருந்தினராகவும், யாழ்.கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலை அதிபர் திருமதி.கவின்யா நவஜீவா, யாழ்.கல்வியங்காடு இந்துதமிழ்க் கலவன் பாடசாலையின் அதிபர் திருமதி.பத்மஜா பாஸ்கரக் குருக்கள் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.

மேற்படி நிகழ்வில் அனைவரையும் கலந்து கொண்டு சிறப்பிக்கும் வண்ணம் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் வேண்டிக் கேட்டுக் கொண்டுள்ளனர்.