கோண்டாவில் ஸ்ரீ ஞானப்பழனி முருகன் ஆலய வருடாந்தக் கந்தசஷ்டி விரத உற்சவத்தின் சூரன் போர் உற்சவம் நாளை சனிக்கிழமை(18.11.2023) மாலை-03.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.
நாளை காலை-06 மணிக்கு அபிஷேகம் ஆரம்பமாகும். நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை(19.11.2023) அதிகாலை-05.30 மணிக்கு அபிஷேகம் ஆரம்பமாகித் தொடர்ந்து பாரணை உற்சவமும் நடைபெறும். அன்றையதினம் மாலை-03.30 மணிக்குத் திருக்கல்யாண உற்சவமும் இடம்பெறுமென மேற்படி ஆலயப் பிரதமகுரு சிவஸ்ரீ த.ரவீந்திரராசாக் குருக்கள் தெரிவித்தார்.
(செ.ரவிசாந்)