யாழில் நாளை மின்தடைப்படும் இடங்கள்....

மின்சாரத் தொகுப்பு பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ்.மாவட்டத்தின் சில பகுதிகளில் நாளை சனிக்கிழமை(18.11.2023) காலை-09 மணி முதல் மாலை-05 மணி வரை மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, டச்சு வீதி- அச்சுவேலி, அச்சுவேலி ஆயுள்வேத மருத்துவமனை, செல்வநாயகபுரம்- வசாவிளான், பலாலி மருதடிச் சந்தி, பலாலி தெற்கு சென்ற் ஜேம்ஸ் சந்தி, கச்சாய் வீதி- சாவகச்சேரி ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டிருக்குமெனவும் இலங்கை மின்சாரசபை மேலும் குறிப்பிட்டுள்ளது. 

(செ.ரவிசாந்)