யாழ்.பொதுநூலகத்தில் புத்தகக் கண்காட்சி: மேலும் இரு நாட்களுக்கு நீடிப்பு!

தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு யாழ்ப்பாணப் பொதுநூலகமும் ஐந்து உள்ளூர்ப் புத்தகசாலைகளும் இணைந்து நடாத்தி வரும் புத்தகக் கண்காட்சியும் விற்பனையும் நிகழ்வு மேலும் இரு நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக மேற்படி பொதுநூலகத்தினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த புதன்கிழமை(15.11.2023) ஆரம்பமான புத்தகக் கண்காட்சி நேற்று வெள்ளிக்கிழமை (17.11.2023) மாலையுடன் நிறைவுபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் மேலும் இரு நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய இன்று சனிக்கிழமையும்(18.11.2023), நாளை ஞாயிற்றுக்கிழமையும்(19.11.2023) காலை-09 மணி முதல் மாலை-04.30 மணி வரை நடைபெறுமென யாழ்ப்பாணப் பொதுநூலகத்தினர் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.