காரைநகரில் நாளை கரப்பந்தாட்டச் சுற்றுப் போட்டியின் இறுதியாட்ட நிகழ்வு

காரைநகர் பிரதேச சபையின் உள்ளுராட்சி வாரத்தை முன்னிட்டு மேற்படி பிரதேச சபையினர் நடாத்திய கரப்பந்தாட்டச் சுற்றுப் போட்டியின் இறுதியாட்ட நிகழ்வு நாளை புதன்கிழமை(22.11.2023) மாலை-03 மணி முதல் காரைநகர் கலாநிதி விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெறவுள்ளது.          

காரைநகர் பிரதேச சபையின் செயலாளர் கி.விஜயேஸ்வரன் தலைமையில் இடம்பெறவுள்ள இறுதியாட்ட நிகழ்வில் அம்பாள் சனசமூக நிலைய அணியை எதிர்த்து ஸ்ரீமுருகன் சனசமூக நிலைய அணி மோதவுள்ளது.

மேற்படி நிகழ்வில் சனசமூக அமைப்புக்கள், விளையாட்டுக்கழகப் பிரதிநிதிகள், சமூக மட்ட அமைப்புக்கள் மற்றும் ஆர்வலர்கள், அபிமானிகள் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு காரைநகர் பிரதேச சபையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.